×

பெட்ரோல், டீசல், எரிவாயு விவகாரத்தில் செயற்கையான தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு வருகிறது: தமிழிசை குற்றச்சாட்டு

சென்னை: தமிழக பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் தற்போது பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விவகாரத்தில் ஒரு செயற்கையான தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். இன்று உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரும் சிக்கல் நிலவுகிறது. சர்வதேச கடல் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் கப்பல்களுக்குப் பல்வேறு தடைகள் உள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கப்பல்கள் அந்த பாதையை கடக்க முடியாத சூழல் நிலவுகிறது. ஆனால், பிரதமர் மோடியின் சிறப்பான வெளியுறவு கொள்கையினால் இந்தியாவுக்குப் பாதிப்பில்லை. நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் அரசுடன் நடத்திய தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் பலனாக, இந்திய தேசியக் கொடி ஏந்திய கப்பல்களுக்கு மட்டும் அந்தப் பாதையில் தடையற்ற அனுமதி கிடைத்துள்ளது.

Tags : Tamilisai ,Chennai ,Tamil Nadu ,BJP ,Tamilisai Soundararajan ,
× RELATED சொன்னாரு..! செஞ்சாரு..!! அரசுப்பள்ளி...