×

தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்: தேர்தல் கமிஷன் அவசர ஆலோசனை: மார்ச் 15 முதல் 17க்குள் அறிவிக்க வாய்ப்பு

 

புதுடெல்லி: தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தேர்தல் கமிஷன் அவசர ஆலோசனை மேற்கொண்டது. தமிழ்நாடு. அசாம், மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுவை ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தலைமையில் நேற்று மாலை முக்கிய உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்களில் நடத்தப்பட உள்ள சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கூட்டத்தின் முடிவில் வாக்குபதிவு கட்டங்கள், வாக்குப்பதிவு தேதிகள் ஆகியவை இறுதி செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து சம்மந்தப்பட்ட மாநில தேர்தல் அதிகாரிகளுடனும் ஞானேஷ்குமார் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து மார்ச் 15 முதல் மார்ச் 17க்குள் தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்களுக்காக சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படலாம் என்று தெரியவருகிறது. ஏனெனில் மார்ச் 14ல் பிரதமர் மோடி மேற்குவங்க மாநிலத்தில் ரூ.19 ஆயிரம் கோடி நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க உள்ளதால் தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Tamil Nadu ,Election Commission ,New Delhi ,Assam ,West ,Bengal ,Puducherry ,Delhi… ,
× RELATED நாடு முழுவதும் சமையல் காஸ்...