×

மேகாலயாவில் வன்முறை பிஎஸ்எப் டிஐஜி காயம்: பாதுகாப்பு வாகனம் தீ வைத்து எரிப்பு

 

ஷில்லாங்: மேகாலயாவில் பழங்குடிகள் மற்றும் இதர பிரிவினருக்கு இடையே மோதலால் மேகாலயாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கும்பல் தாக்குதல் நடத்தியதில் பிஎஸ்எப் டிஐஜி காயமடைந்தார். மேகாலயா மாநிலத்தில் உள்ள கரோ ஹில்ஸ் மாவட்டம் உள்ளது. இந்திய-வங்கதேச எல்லையில் அமைந்துள்ள கரோ ஹில்ஸ் தன்னாட்சி மாவட்ட கவுன்சில் தேர்தலுக்கான மனுதாக்கல் நடைபெற்றது.

சிபினாங் என்ற பகுதியில் மனுதாக்குதலின்போது பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாத பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் வன்முறையாக வெடித்துள்ளது. மனுதாக்கலின்போது ஏற்பட்ட வன்முறையின்போது வன்முறை கும்பலை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து மாவட்டத்தில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்) டிஐஜி மற்றும் அதிகாரிகள் துரா நகரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதில் டிஜஜி மற்றும் அதிகாரிகள் லேசான காயம் அடைந்தனர். டிஜஜியின் பாதுகாப்பு வாகனம் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. வன்முறையைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் 10 ம் தேதி நடைபெறவிருந்த தேர்தலை அரசு ஒத்திவைத்துள்ளது.

Tags : Meghalaya ,BSF ,DIG ,Shillong ,BSF DIG ,Karo Hills district ,Karo Hills ,India-Bangladesh ,
× RELATED மேற்குவங்க ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என்.ரவி