×

ஈரான் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினுடன் அதிபர் டிரம்ப் ஆலோசனை

மாஸ்கோ: மேற்கு ஆசியாவில் போர் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடினை நேற்று முன்தினம் நள்ளிரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த பேச்சுவார்த்தை சுமார் 1 மணி நேரம் நடந்தது. இதில், ஈரான், உக்ரைன் போர் தொடர்பாக இரு தலைவர்களும் முக்கிய ஆலோனை நடத்தியதாக ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் வெளியுறவு கொள்கை உதவியாளர் யூரி உஷாகோவ் கூறினார். அவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஈரான் போர் குறித்தும், வளைகுடா நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியனுடன் கடந்த வாரம் பேசியது குறித்தும் புடின் டிரம்பிற்கு விளக்கினார். பதிலுக்கு, தற்போதைய நிலவரம் குறித்து டிரம்ப் தகவல் தெரிவித்தார்’’ என்றார்.முன்னதாக, தனது எரிசக்தி துறை உயர் அதிகாரிகளுடன் புடின், ஆலோசனை நடத்தினார்.

Tags : President Trump ,Iran ,President Putin ,Moscow ,West Asia ,US ,
× RELATED 24 பேருக்கு சாகித்ய அகாடமி விருது