×

தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ்2 தேர்வு எழுதிய மாணவி

சின்னசேலம்: சின்னசேலம் அருகே தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி, தேர்வை எழுதி முடித்துவிட்டு தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ராயப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி. இவருடைய மகள் கயல்விழி என்பவர் தாகம்தீர்த்தாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். மேலும் தற்போது அரசு பொதுத்தேர்வு எழுதி வருகிறார். இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கயல்விழியின் தந்தை மாசிலாமணி நேற்று முன்தினம் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தனது தந்தையின் கனவை நிறைவேற்ற அரசு பொதுத்தேர்வில் தீவிர கவனம் செலுத்தி வந்த கயல்விழி, தந்தை இறந்த துக்கத்திலும் நேற்று நடந்த வேதியியல் தேர்வை எழுதிவிட்டு அழுகையுடன் வெளியே வந்தார். அப்போது மாணவி கயல்விழி கூறுகையில், என் தந்தை இருக்கும்போது நீ நல்லா படித்து உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவருடைய கனவை நிறைவேற்றும் விதமாகத்தான், தந்தை இறந்த சோகத்திலும் தேர்வை எழுதினேன் என்றார். இந்த மாணவியின் மன உறுதியை ஆசிரியர்கள், மாணவர்கள், அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

இருப்பினும் தேர்வெழுதிய முடித்தவுடன் கண்ணீருடன் வீட்டிற்கு சென்ற கயல்விழி, தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். இது அப்பகுதி மக்களிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags : Sinnesalam ,Masilamani ,Raipanur ,Kallakurichi district ,
× RELATED செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில்...