சென்னை: கர்நாடக மாநிலம் தார்வாட் நகரில் சரந்திமத் கார்டனில் ஆர்க்கிட்ஸ் சர்வதேச பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவர்களின் ஆர்வத்தை விண்வெளி திறனாக மாற்றுவதற்காக பிராஜக்ட் அனந்த் என்ற பெயரில் கல்வி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், அடுத்த தலைமுறை பொறியாளர்கள் மற்றும் விண்வெளி கண்டுபிடிப்பாளர்களை வளர்ப்பதை நோக்கமாக கொண்ட செயற்கை கோள் தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ், ராக்கெட் உள்ளிட்ட அதிவேக கற்றலில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது. புராஜக்ட் அனந்த் திட்டத்தை முன்னாள் இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் நடைமுறை விண்வெளி திறன்களை வளர்ப்பதை நோக்கமாக கொண்டது. இந்த திட்டத்தில் கோளரங்க பயணங்கள், தொலைநோக்கிகள் மற்றும் மாதிரிகளை உருவாக்கவும் ராக்கெட் பட்டறைகள் போன்ற செயல்பாடுகள் அடங்கும். மாணவர்கள் நிஜ உலக பொறியியல் சவால்களுக்குத் தயாராக, ரோபாட்டிக்ஸ், ஏஐ மற்றும் குறியீட்டு முறை உள்ளிட்ட சிக்கலான விண்வெளிக் கருத்துக்கள் மூலம் வழிநடத்தப்படுகிறார்கள். விண்வெளி ஆராய்ச்சி மற்றும் அதன் தொழில்நுட்பம் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை எதிர்கால விண்வெளி ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்த பள்ளியில் தான் முதன்முதலாக பள்ளி மாணவர்களுக்கான விண்வெளி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
