- ஜி.டி நாயுடு
- கோயம்புத்தூர்
- மதுரை
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- கோயம்புத்தூர் வி.ஓ.சி பூங்கா
- G.D.
- வி.ஓ.சி பூங்கா
- அவிநாசி
சென்னை: கோவை வ.உ.சி பூங்காவில் ஜி.டி.நாயுடுவின் சிலையையும், மதுரையில் 396 குடியிருப்புகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். கோவை அவினாசி பிரதான சாலையில் உள்ள வ.உ.சி. பூங்காவில் ரூ.50 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு சிலையை சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தபடி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, சாமிநாதன், தலைமைச்செயலாளர் முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வைத்திநாதன் கலந்து கொண்டனர்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மதுரையில் சுப்பிரமணியபுரம் திட்டப் பகுதியில் ரூ.62.68 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 396 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மதுரை மாநகராட்சிக்குட்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்கு இக்குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பரசன் உள்ளிட்டோரும், மதுரையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
