×

ராமநாதபுரத்தில் ரூ.120 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்

 

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ரூ.120 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரிகூட்டம் பேருந்து நிறுத்தம் அருகே கியூ பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையில் போதைப்பொருள்கள் சிக்கின. 41 பொட்டலங்களில் 219 கிலோ கஞ்சா, 19 பொட்டலங்களில் 19 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல்; 20 பொட்டலங்களில் 10 கிலோ ஹெராயின் போதைப்பொருளையும் கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். வேனில் போதைப்பொருள்களை கடத்தி வந்த 2 பேரை கியூ பிரிவு போலீசார் கைதுசெய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் சர்வதேச மதிப்பு ரூ.120 கோடி என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Narcotics ,Ramanathapuram ,Q Division police ,Karikutam ,
× RELATED சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலத்தில் 2 பேர் வெட்டிக் கொலை!