குன்னூர்,மார்ச்9: வண்டிச்சோலை ஊராட்சியில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ பரப்புரை நடந்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வண்டிச்சோலை ஊராட்சி காட்டேரி பூங்கா பகுதியில் திமுக அரசின் ஐந்தாண்டு கால சாதனைகளை விளக்கும் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. நீலகிரி மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், காட்டேரி பூங்கா மற்றும் நஞ்சப்பச்சத்திரம் ஆகிய பகுதிகளில் திமுக நிர்வாகிகள் அரசு திட்டங்கள் குறித்து வீடு வீடாக பரப்புரையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக தமிழ்நாடு அரசின் கடந்த ஐந்தாண்டு கால சாதனைகள், மகளிருக்கான திட்டங்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அரசின் திட்டங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை வழங்கி, அதன் பயன்களை பொதுமக்கள் எவ்வாறு பெற்றுள்ளனர்? என்பது குறித்து கேட்டறிந்தனர். நிகழ்ச்சியில் பூத் பொறுப்பாளர் சசிகலா,மாவட்ட பிரதிநிதி கருணாநிதி, கிளைச் செயலாளர் தாமஸ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மகாலிங்கம், திமுக நிர்வாகி ஜான் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
