- பாலக்காடு கோட்டை மைதானம்
- பாலக்காடு
- கேரள மாநிலம்
- அமைச்சர்
- ராஜேஷ்
- காஞ்சிரபுழா
- வந்தாழி
- பெருமாட்டி
- புதுச்சேரி
- ஐலூர்
- பறம்பிக்குளம்
பாலக்காடு: பாலக்காடு கோட்டை மைதானத்தில் பழங்குடி மக்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. இதனை கேரள மாநில கலால்த்துறை அமைச்சர் ராஜேஷ் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். காஞ்ஞிரப்புழா, வண்டாழி, பெருமாட்டி, புதுச்சேரி,அயிலூர்,பரம்பிக்குளம் ஆகிய இடங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் இந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்கள் மலசர்நாட்டியம், கதிருகளி,கொட்டுமாராட்டம் ஆகிய பாரம்பரிய நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஊர் மூப்பனர்கள்,கலைஞர்களை அமைச்சர் பாராட்டி கவுரவித்தார். நிகழ்ச்சிக்கு பாலக்காடு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சசி தலைமை தாங்கினார். மாவட்ட மிஷன் ஒருங்கிணைப்பாளர் உன்னிகிருஷ்ணன், உதவி ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் உள்பட உள்ளாட்சி அமைப்பினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
