×

மஞ்சூர் மின்வாரிய அலுவலகம் முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மஞ்சூர்,மார்ச்4: மஞ்சூரில் மின்வாரிய பொறியாளர் அலுவலகம் முன்பு தொழிற்சங்கத்தினர் 5வது நாளாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய மேல் முகாமில் உள்ள குந்தா புனல் உற்பத்தி வட்ட மேற்பார்வை பொறியாளர் இன்ஜினியர் சங்க பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமை தாங்கினார். பொறியாளர் மகேந்திரமணி தலைமை தாங்கினார்.

பொறியாளர்கள் வடிவேல், பாலசுப்ரமணி, சிவசரண், ஐக்கிய சங்கத்தின் மாநில செயலாளர் மலையகம் ஜெயக்குமார்,மின் ஊழியர் மத்திய அமைப்பு தலைவர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் தியாகராஜன், வடிவேல், ராதா, சரவணகுமார் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கி பேசினர்.தொடர்ந்து மின் ஊழியர் அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆறுமுகம் நன்றி கூறினார்.

 

 

Tags : Manjoor Electricity Board ,Manjoor ,Electricity Board Engineer ,Balamurugan ,General Committee ,Kuntha Funnel Production Circle Supervisory Engineer Engineers Association ,Upper Camp ,Nilgiris District… ,
× RELATED வாளையார் பகுதியில் வன விலங்குகள்...