×

தாளூர் கல்லூரியில் ஓவிய கண்காட்சி

பந்தலூர்,மார்ச்4: பந்தலூர் அருகே தாளூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓவிய கண்காட்சி நடைபெற்றது. நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) மற்றும் ஈரநிலம்,ஆதிநிலம் சார்பில் ‘‘வனங்கள், உயிர்களின் உயிர்’’ என்ற தலைப்பில் ஓவியக் கண்காட்சி கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது. கண்காட்சியில் 60-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றன. இயற்கை, வனவிலங்குகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உயிரினங்களை மையமாகக் கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் பார்வையாளர்களின் மனதை கவர்ந்தன.

800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்காட்சியை கண்டு ரசித்தனர். நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் முனைவர் ராசித் கஸ்ஸாலி தலைமை தாங்கினார்.கல்லூரி முதல்வர் முனைவர் பால சண்முக தேவி வாழ்த்துரை வழங்கினார்.துணை முதல்வர் ரஞ்சித், பேராசிரியர் மோகன் பாபு, வளாக மேலாளர் உமர், ஈரநிலம் ஓவியர் தமிழரசு, ஆதி நிலம் வீரப்பன், பேராசிரியர்கள் சாந்தி, ஜோதி மீனாட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Thalur College ,Pandalur ,Thalur Arts and Science College ,Nilgiris Arts and Science College ,Autonomous ,Wetland ,Adhinilam ,
× RELATED வாளையார் பகுதியில் வன விலங்குகள்...