×

திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கிணத்துக்கடவு மார்ச் 9: வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வினோத் (31), இவர் கிணத்துக்கடவு பகுதியில் தனது அண்ணன் விக்ரமுடன் வசித்து வந்தார். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தனது தங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகத்திலும், தனக்கு திருமணம் ஆகவில்லை என்ற ஏக்கத்திலும், மது பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் விக்ரம், வினோத்தை கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த வினோத் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Kinathukadavu ,Vinod ,Vellore district ,Vikram ,
× RELATED 39 அடி உயர கால பைரவர் சிலைக்கு பாலாபிஷேகம்