×

மாவட்டத்தில் 10-ம் வகுப்பு ெபாதுத்தேர்வை 37,839 பேர் எழுதினர்

கோவை, மார்ச் 12: கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கிய நிலையில், 37,839 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. அதன்படி, தமிழ் மற்றும் மொழிப்பாடத்திற்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வை கோவை மாவட்டத்தில் 159 தேர்வு மையங்களில் 509 அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் சேர்ந்த 18 ஆயிரத்து 861 மாணவர்கள், 19 ஆயிரத்து 529 மாணவிகள் என மொத்தம் 38 ஆயிரத்து 390 பேர் எழுத இருந்தனர். இவர்களில் 37 ஆயிரத்து 839 பேர் தேர்வை எழுதினர். 551 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. மேலும், தேர்வில் முறைகேடுகள், தவறுகள் நடக்காமல் இருக்கும் வகையில் 250 பறக்கும் படைகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். தேர்வு பணியில் 159 முதன்மை கண்காணிப்பாளர்கள், 159 துறை அலுவலர்கள், 47 வழித்தட அலுவலர்கள், 2,075 அறை கண்காணிப்பாளர்கள், 316 அலுவலக பணியாளர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவ சொல்வதை கேட்டு எழுதும் (ஸ்கிரைப்) 946 ஆசியர்கள் ஈடுபட்டனர்.

திருச்சி ரோட்டில் உள்ள புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள தேர்வு மையத்தில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஆய்வு செய்தார். பின்னர், அவர் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். தவிர, தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், தேர்வு எழுதிய மாணவர்கள் தமிழ் பாடத்திற்கான தேர்வு எளிதாக இருந்ததாக தெரிவித்தனர். தவிர, ஒரு மதிப்பெண் வினாவில் 11-வது கேள்வி பாடத்தில் இருந்து வெளியில் இருந்து கேட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Coimbatore ,Tamil Nadu ,
× RELATED சிறுமுகை அம்பாள் பப்ளிக் பள்ளியில் மகளிர் தின கொண்டாட்டம்