- -பதிவாளர்
- சூலூர்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- -பதிவாளர் அலுவலக கட்டிடம்
- சுலூர், கோயம்புத்தூர் மாவட்டம்
- சென்னை
சூலூர், மார்ச் 11: கோவை மாவட்டம் சூலூரில் புதிய சார் பதிவாளர் அலுவலக கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். ரூ.1 கோடியே 88 லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்த புதிய கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக சூலூர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. முன்னதாக சூலூர் சார் பதிவாளர் அலுவலக தலைமை எழுத்தர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார். கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் தலைமை வகித்தார். விழாவில் பத்திரப்பதிவு மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் சார் பதிவாளர்கள் பூபதி ராஜா, ராஜேஸ்வரி, ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன், கண்ணம்பாளையம் பேரூராட்சி தலைவர் புஷ்பலதா, ராஜகோபால், சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், சூலூர் செயல் அலுவலர் சரவணன், பசுமை நிழல் விஜயகுமார், பத்திர எழுத்தர்கள் கலந்து கொண்டனர்.
