×

39 அடி உயர கால பைரவர் சிலைக்கு பாலாபிஷேகம்

 

மொடக்குறிச்சி, மார்ச் 13: தேய்பிறை அஷ்டமியையொட்டி தென்னக காசி கால பைரவர் கோயிலில் 39 அடி உயர கால பைரவர் சிலைக்கு ஆன்மீக குரு விஜய் சுவாமிஜி தலைமையில் பாலாபிஷேகம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அடுத்த ராட்டைச்சுற்றிபாளையத்தில் தென்னக காசி காலபைரவர் கோயில் உள்ளது. 39 அடி உயரமுள்ள கால பைரவர் சிலை அமைந்துள்ளது.

இந்த கோயிலில் வெள்ளிக்கிழமை, பவுர்ணமி, அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள் மட்டுமின்றி தினமும் மாலையில் சொர்ணலிங்கம், சொர்ணஷாசன பைரவருக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று வருகிறது. இந்த கோயிலில் சிறப்பம்சமாக பெண்கள் கருவறைக்குள் சென்று பாலாபிஷேகம் செய்து வழிபடுவது உள்ளது.மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமி அன்று காலபைரவருக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. பக்தர்கள் தங்கள் திருக்கரங்களால் பைரவருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர்.

Tags : Balabhishekam ,Modakkurichi ,Theipirai Ashtami ,Southern ,Kasi Kala Bhairava ,Vijay Swamiji ,Rattaichutripalayam ,Avalpoonthurai ,Erode district ,
× RELATED சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துணை...