×

ரூ.26 லட்சத்தில் கலையரங்கம் திறப்பு

 

போச்சம்பள்ளி, மார்ச் 9: போச்சம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழகம், நகர அரிமா சங்கம் ஏற்பாட்டில் சுமார் ரூ.26 லட்சத்தில், 700 மாணவிகள் அமரக்கூடிய கலையரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கவுதம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி, சேர்மன் தட்ரஅள்ளி நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் காந்திமதி வரவேற்றார். இதில், மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ கலந்து கொண்டு, கலையரங்கத்தை திறந்து வைத்தார். விழாவில், மருத்துவர் அணி மாவட்ட துணை தலைவர் டாக்டர் தென்னரசு, வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் இளையராஜா, அம்மன்ராஜா, சரவணன், நேதாஜி, கிருஷ்ணன், பழனி, சிவராஜ், சுப்பிரமணி, அனிஷ்குமார், ராமன், திருநாவுக்கரசு, சின்னராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜெயந்தி நன்றி கூறினார்.

Tags : Pochampally ,Parents Teachers Association ,Nagara Arima ,Sangam ,Pochampally Government Higher Secondary School ,President ,Gautham… ,
× RELATED ஹெல்மெட் அணிய வலியுறுத்தி பிரசாரம்