ராயக்கோட்டை, மார்ச் 10: ராயக்கோட்டை பகுதியில் சுரைக்காய் விளைச்சல் அதிகரித்து, விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியில் விவசாயிகள் பரவலாக சுரைக்காயை சாகுபடி செய்துள்ளனர். விளைச்சலுக்கு வரும் காய்களை பறித்து ராயக்கோட்டை மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஒரு சுரைக்காய் ஒரு கிலோ அளவிற்கு பருமனாக உள்ளது. வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது. கிலோ ரூ.6க்கும் குறைவாக வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். அதை சில்லரை வியாபாரிகள் கிலோ ரூ.10 வரை விற்பனை செய்கின்றனர். விலை குறைவாக போவதால், விவசாயிகள் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.
