×

கிணற்றில் விழுந்த காளை மீட்பு

கிருஷ்ணகிரி, மார்ச் 4: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் காளி. விவசாயியான இவர், காளை மாடுகளை வளர்த்து வருகிறார். காளைகளை மேய்ச்சலுக்காக தன்னுடைய விவசாய நிலத்தில் விடுவது வழக்கம். நேற்று காலை வழக்கம்போல் காளைகளை தோட்டத்தில் அவிழ்த்து விட்டிருந்தார். அப்போது, ஒரு காளை அங்குள்ள 80 அடி ஆழமுள்ள தரைமட்ட படிகளற்ற தண்ணீர் நிரம்பிய கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வீரர்களான பழனி, ராஜேஷ் சங்கர், அருண்குமார், அன்புமணி ஆகியோர் விரைந்து சென்று கிணற்றில் கயிறு கட்டி இறங்கி காளையை பத்திரமாக மீட்டனர்.

Tags : Krishnagiri ,Venkadapuram ,Barkur, Krishnagiri district ,
× RELATED கிணற்றில் முதியவர் சடலம்கிணற்றில் முதியவர் சடலம்