- தெக்கனிகோட்டை
- வரகனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
- கெலமங்கலம் ஒன்றியம்
- ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர்
- முதல்நிலை கல்வி)
- நரசிம்மன்
- தலைமை ஆசிரியர்…
தேன்கனிக்கோட்டை, மார்ச் 10: வரகானப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கெலமங்கலம் ஒன்றியம் வரகானப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஆண்டு விழா நடைபெற்றது. ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர்(தொடக்கக் கல்வி) நரசிம்மன் தலைமை ஏற்று பேசினார். தலைமை ஆசிரியர் வள்ளியம்மாள் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் சுதாகர், லோகேஷா, பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தளி எம்எல்ஏ ராமச்சந்திரன், கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேட்டு, நாகமங்கலம் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் கோவிந்தசாமி, திம்மராயன், முன்னாள் துணைத்தலைவர் வெங்கடேஷ், ஊர் கவுண்டர் ராமச்சந்திரன், பள்ளி மேலாண்மைக்குழுவினர், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
