- தேன்கனி கோட்டை கவி நரசிம்மசுவாமி கோவில் தேர் திருவிழா
- Thenkanikottai
- கவி லட்சுமி நரசிம்மசுவாமி கோவில்
- தேன்கனி கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம்
- மாசித்துருவி விழா
தேன்கனிக்கோட்டை, மார்ச்4: தேன்கனிக்கோட்டை கவி நரசிம்மசுவாமி கோயில் தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த கவி லட்சுமி நரசிம்மசுவாமி கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு, பிப்ரவரி 22ம் தேதி முதல் தினமும் உற்சவங்கள் நடைபெற்று வருகின்றது. நேற்று முன்தினம் இரவு ராமபானம் நிகழ்ச்சியும், நேற்று தேர்த்திருவிழாவும் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதா லட்சுமி நரசிம்மசுவாமி உற்சவ மூர்த்திகளை தேரில் அமர்த்தி சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு தேரை வடம்பிடித்து இழுத்து கோயிலை சுற்றி வந்து நிலை நிறுத்தினர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, திருவிழா கமிட்டி சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம், நீர்மோர், பானகம் வழங்கப்பட்டது. விழாவில் இன்று(4ம் தேதி) இரவு பக்த பிரகலாத நாடகம், முத்துபல்லக்கு, வானவேடிக்கை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர் செய்துள்ளனர்.
