×

அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு மன்னிப்பு கேட்டார் ஈரான் அதிபர்!!

தெஹ்ரான் : அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்புக் கேட்டார். அண்டை நாடுகளின் மண்ணை பயன்படுத்தி ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாமல் இருந்தால், அவர்கள் மீது இனி தாக்குதல் நடத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு, சவுதி அரேபியா உள்ளிட்ட அண்டை நாடுகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ரோன் தாக்குதலுக்கான அந்நாட்டு அதிபர் மசூத் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரினர். அமெரிக்க, இஸ்ரேல், ஈரான் ஆகிய 3 நாடுகள் இடையேயான போர் 8வது நாளை எட்டியுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சவுதி அரேபியா, யுஏஇ. கத்தார். ஓமன், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதலை நடத்தி வருகிறது. அங்கிருக்கும் அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகங்களை குறி வைத்து தாக்குதலை நடத்தி வந்த நிலையில், துபாயில் இன்று காலை சர்வதேச விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதலில் ஈரான் ஈடுபட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் எந்த சேதமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில், சவுதி அரேபியா, கத்தார், ஓமன், பஹ்ரைன் உள்ளிட்ட அண்டை நாடுகளின் மீது நடத்தி வரும் தாக்குதல் சம்பவத்திற்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, அண்டை நாடுகளில் இருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கான பதிலடி கொடுக்கப்படும். மற்றபடி, அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம். இதற்கான ஒப்புதலை இடைக்கால தலைமை கவுன்சில் வழங்கியுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Tags : Iran ,TEHRAN ,PRESIDENT ,MASOOD BESHESHIAN ,United ,
× RELATED 5 ஆண்டு காதல் திருமணம் கசந்தது ஒன்றாக...