×

அண்டை நாடுகளிடம் ஈரான் சரணடைந்து, வரலாற்றில் முதல் முறையாக தோல்வி அடைந்துள்ளது: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து

வாஷிங்டன்: அமெரிக்க, இஸ்ரேலியப் படைகளின் இடைவிடாத தாக்குதலின் காரணமாக அண்டை நாடுகளிடம் மன்னிப்புக் கேட்டு ஈரான் சரணடைந்துவிட்டதாக ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். மேலும்,“பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றில், அண்டை நாடுகளிடம் ஈரான் தோற்றது இதுவே முதல் முறை. மத்திய கிழக்கை ஆதிக்கம் செலுத்த நினைத்த ஈரானின் கனவு கலைக்கப்பட்டது. ஈரான் முழுமையாகச் சரணடையும் வரை இதே நிலைதான் நீடிக்கும்”, எனத் தெரிவித்துள்ளார்.

அரபு நாடுகளை இனி தாக்க மாட்டோம் என்று ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டது. இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவர் தமது ட்ரூத் சோஷியல் தளத்தில் கூறி உள்ளதாவது; தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வரும் ஈரான், மத்திய கிழக்கு நாடுகளிடம் மன்னிப்பு கேட்டு சரண் அடைந்துள்ளது. இனி அந்நாடுகள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று உறுதி அளித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடும் தாக்குதல் எதிரொலியாக தான் இந்த அறிவிப்பு வெளிவந்து இருக்கிறது. ஈரான், மத்திய கிழக்கு நாடுகளை ஆட்சி செய்ய விரும்பியது. ஆனால் சுற்றியுள்ள நாடுகளிடம் இப்போது தோற்றுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் இப்படி நடந்திருப்பது இதுவே முதல்முறை, ஈரான் சரண் அடையும் வரை மிகவும் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என கூறியுள்ளார்.

Tags : Iran ,US ,President ,Trump ,Washington ,Middle East ,
× RELATED அண்டை நாடுகள் மீது தாக்குதல்...