×

கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கருப்பு துணி கட்டி அரசு ஊழியர்கள் மறியல் 52 பேர் கைது

கரூர், பிப்.10: கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 8வது நாளாக நேற்று வாயில் கருப்பு துணி கட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கங்களை சேர்ந்த 52 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் கிளையின் சார்பில் இழந்ததை மீட்டிட இருப்பதை காத்திட தொடர் மறியல் போராட்டம் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் என்ற அடிப்படையில் கரூர் தாலுகா அலுவலகம் முன் தொடர் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். எட்டாவது நாளாக நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன் கரூர் மாவட்டத்தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் வாயில் கருப்புத்துணி கட்டி போராட்டம் நடைபெற்றது. இதில், 12 பெண்கள் உட்பட 48 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், வளர்ப்புற நூலகர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் ஆகியோர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

Tags : government employees ,Karur ,protest ,
× RELATED அரசுப் பணிக்கான தேர்வில் தமிழில் 40%...