×

கிருஷ்ணராயபுரம் அருகே றிநாய் கடித்து ஆடுகள் பலி

 

கிருஷ்ணராயபுரம், ஜூன் 3: கிருஷ்ணராயபுரம் அருகே புனவாசிப்பட்டி பகுதியில் மேய்ச்சலில் இருந்த 10க்கு மேற்பட்ட வெள்ளாடுகளை வெறிநாய்கள் கடித்து குதறியதில் 6 ஆடுகள் பலியானது. ரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், சிந்தலவாடி ஊராட்சி புனவாசிப்பட்டி அருகே நரசிங்கபுரம் பகுதியில் விவசாயி சக்திவேல் என்பவர் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். ந்நிலையில் நேற்று காலை தனது வயலில் ஆடுகளை மேய்ந்து கொண்டிருக்கும்போது அப்பகுதியில் சுற்றி திரிந்த வெறிநாய்கள் வெள்ளாடுகளை கடித்து குதறியது. இதில் 6 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. அதில் ஒரு நிறைமாத சினை ஆட்டை நாய் கடித்து குதறியதில் வயிற்றுக்குள் இருந்த 2 குட்டிகள் வெளியே வந்து இறந்து கிடந்தது குறிப்பிடப்பட்டது. மேலும் 4 ஆடுகள் காயமடைந்து.

இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. திக்கப்பட்ட விவசாயி சக்திவேல் உடனடியாக சிந்தலவாடி கிராம நிர்வாக அலுவலர் பிரபுவிற்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வு செய்தார். பின்னர் கால்நடை மருத்துவத்துறையினர் வந்து இறந்து போன ஆடுகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். தொடர்ந்து அப்பகுதியில் கடந்த 10 தினங்களாக இதே போல் வெறி நாய்கள் கடித்ததில் இரண்டு ஆடுகள், மூன்று ஆடுகள் இறந்து வருகிறது. ஊராட்சி நிர்வாகம் வெறி நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கிருஷ்ணராயபுரம் அருகே றிநாய் கடித்து ஆடுகள் பலி appeared first on Dinakaran.

Tags : RHINAI ,KRISHNARAYAPURAM ,Punavasipatti ,Narasingapuram ,Rur District ,Krishnarayapuram Union ,Chinthalawadi Orati ,
× RELATED கிருஷ்ணராயபுரம் அருகே மகிளிபட்டியில்...