×

அரவக்குறிச்சி பகுதியில் தொடர் மழை காய்த்திருந்த முருங்கை காய்கள் பழுத்து வெம்பின கிலோ ரூ.20க்கு விற்பனை

 

அரவக்குறிச்சி, மே 30: அரவக்குறிச்சி பகுதியில் தொடர் மழை காரணமாக மரங்களில் காய்த்திருந்த முருங்கை காய்கள் ஈரப்பதத்தினால் பழுத்து வெம்பிப் போயின. இதனால் விவாசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தரமில்லாத காய் என்பதால் தற்போது கிலோ ரூ.20 க்கு விற்பனையாகின்றது. அரவக்குறிச்சி பகுதியில் ஈசநத்தம், ஆலமரத்துப்பட்டி, சாந்தப்பாடி, கோவிலூர், நாகம் பள்ளி, வெஞ்சமாங்கூடலூர் உள்ளிட்ட 20 ஊராட்சிகளில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கை பயிரிடப்படுகின்றது. இப்பகுதி முருங்கை காய்திரட்சியாகவும், சுவையாகவும் இருக்கும் என்பதால் தமிழகத்து மாவட்டத்தில் மட்டுமல்லாமல், அன்மை மாநிலங்களிலும் அரவக்குறிச்சி பகுதி முருங்கை காயிக்கு தனி மெளசு உள்ளது.

ஆகையால் மலைக்கோவிலூர், ஈசாத்தம், இந்திரா நகர், பள்ளபட்டி பழனி சாலை உள்ளிட்ட மொத்த கொள்முதல் மையங்களிலிருந்து, முருங்கை மொத்த வியாபாரிகள் வாங்கி மற்ற இடங்களுக்கு அனுப்பு வைப்பார்கள். இந்நிலையில் அரவக்குறிச்சி பகுதியில் தொடர் மழை காரணமாக தற்போது மரங்களில் காய்த்திருந்த முருங்கை காய்கள் ஈரப்பதத்தினால் பழுத்து வெம்பிப் போயின. இதனால் விவாசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சென்ற மாதம் கிலோ ரூ 80 க்கும் மேல் விற்கப்பட்ட முருங்கை காய், தரமில்லாத காய் என்பதால் தற்போது கிலோ ரூ.20 க்கு விற்பனையாகிறது.

The post அரவக்குறிச்சி பகுதியில் தொடர் மழை காய்த்திருந்த முருங்கை காய்கள் பழுத்து வெம்பின கிலோ ரூ.20க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Aravakurichi ,Dinakaran ,
× RELATED அரவக்குறிச்சியில் உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும்