×

கிருஷ்ணராயபுரம் பகுதி அரசு பள்ளிகளுக்கு புத்தகங்கள் வந்திறங்கின

 

கிருஷ்ணராயபுரம், ஜூன் 2: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 10ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டு வழங்க உள்ள புத்தகங்கள் மாவட்ட கல்வி அலுவலகங்களில் இருந்து அரசு பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்டு பள்ளியில் பாதுகாப்பான அறையில் இறக்கி வைக்கப்படுகிறது. கிருஷ்ணராயபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 6 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயலும் மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டுக்கான புதிய புத்தகங்கள் வாகனங்களில் இருந்து இறக்கும் பணியில் மும்முரமாக பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

The post கிருஷ்ணராயபுரம் பகுதி அரசு பள்ளிகளுக்கு புத்தகங்கள் வந்திறங்கின appeared first on Dinakaran.

Tags : Krishnarayapuram ,Tamil Nadu ,Karur district ,government ,Dinakaran ,
× RELATED பைக் மோதி நடந்து சென்ற சிறுவன் காயம்