×

கரூர் அருகே மின்சாரம் தாக்கி பலியான மயில் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

 

தோகைமலை, ஜூன் 3: கரூர் அருகே மின்சாரம் தாக்கி பலியான மயில் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே பண்ணப்பட்டி ஊராட்சி ரங்கபாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான மயில்கள் சுற்றி திரிகிறது. இந்த மயில்கள் அனைத்தும் இரவு நேரங்களில் அந்த பகுதியில் உயரமான மரங்களில் உள்ள கிளைகளில் தங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் மயில்கள் அனைத்தும் மரங்கள் மீது அடைவதற்கு பறந்து சென்று உள்ளது.

இதில் 3 வயது உடைய ஒரு ஆண் மயிலின் சிறகுகள் அருகில் இருந்த மின் கம்பத்தில் உரசி உள்ளது. இதனால் அந்த ஆண் மயில் மீது மின்சாரம் தாக்கி இறந்த நிலையில் அங்கேயே கிடந்துள்ளது. தகவலறிந்த கடவூர் தாசில்தார் இளம்பரிதி தலைமையில் மைலம்பட்டி ஆர்ஐ அருள்ராஜ், விஏஓ முத்துச்சாமி சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் மின் கம்பியில் இறந்து கிடந்த மயிலை மீட்டு கடவூர் வனக்காப்பாளர் சிவரஞ்சனியிடம் ஒப்படைத்தனர்.

The post கரூர் அருகே மின்சாரம் தாக்கி பலியான மயில் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Peacock ,Karur ,Thokaimalai ,Rangapalayam ,Pannapatti Panchayat ,Dharagambatti ,Dinakaran ,
× RELATED கரூர்- திருச்சிராப்பள்ளி ரயில்வே...