×

ஈரான் மீதான தாக்குதல்; தலைவர்கள் கண்டனம்

சென்னை: ஈரான் மீதான தாக்குதலுக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜவாஹிருல்லா(மமக தலைவர்): ஈரான் இஸ்லாமிய குடியரசின் உயரிய தலைவர் அலி காமேனி உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டதாக கூறப்படும் வான்வழித் பயங்கரவாத தாக்குதல், ஒரு சுயாட்சி நாட்டின் இறையாண்மையை வெளிப்படையாக மீறும் செயல் ஆகும். போர் என்பது தீர்வாகாது; அது மனித உயிரிழப்புகளையும் அழிவையும் மட்டுமே அதிகரிக்கும். எனவே,அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனடியாக அனைத்து தாக்குதல் நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும்.
நெல்லை முபாரக்(எஸ்டிபிஐ கட்சி தலைவர்): குழந்தைகளின் உயிரிழப்பு என்பது, போர் மற்றும் மோதல்கள் ஏற்படுத்தும் பேரழிவின் ஒரு கொடூரமான சாட்சியாகும். துயரத்தில் ஆழ்ந்துள்ள ஈரான் நாட்டு மக்களுக்காகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காகவும் நாம் பிரார்த்திக்கிறோம். சர்வதேச சமூகம் இதில் பொறுப்புடன் தலையிட்டு, போர் வன்முறையைத் தவிர்த்துப் பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

Tags : Iran ,Chennai ,JAWAHURULLAH ,ISLAMIC REPUBLIC OF ,ALI KHAMENI ,United States ,Israel ,
× RELATED அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்: ஈரான்...