×

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் பயணம் திடீர் ரத்து

அமெரிக்க வெளியுறவு அமைச்சரான மார்கோ ரூபியோ இரண்டு நாள் பயணமாக இன்று இஸ்ரேல் செல்ல திட்டமிட்டிருந்தார். அமெரிக்கா,இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்திய கூட்டு ராணுவ தாக்குதலையடுத்து மார்கோ ரூபியோவின் இஸ்ரேல் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூபியோவின் இஸ்ரேல் பயணம் இன்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில், அந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர் மீண்டும் இஸ்ரேல் செல்வாரா என்பது தெரியவில்லை என்று அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் டைலான் ஜான்சன் தெரிவித்தார்.

Tags : US ,Secretary of State ,Israel ,Marco Rubio ,Iran ,US State Department… ,
× RELATED ஈரான் மீதான தாக்குதல்; தலைவர்கள் கண்டனம்