×

2026 தேர்தலை முன்னிட்டு வர்த்தகர்களுக்கு திமுக அரசு செய்த சாதனைகள் துண்டு பிரசுரம் மூலம் கடை கடையாக சென்று விநியோகிக்கப்படும்: வர்த்தகர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: திமுக வர்த்தகர் அணி மாநில நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் மாநில செயலாளர் காசி முத்துமாணிக்கம் தலைமையில், மாநில நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தியாவே பாராட்டும் பண்பாட்டின் சிகரம் தமிழக முதல்வர் தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் வகையில் தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் 1ம் தேதி பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் போடுவது, அறுசுவை உணவு வழங்குவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

வணிகர்கள் இடர் நீக்கிட 20 கோடிக்கு மேல் வரிகளை, கடன் நிலுவை வரிக்கடன்களை தள்ளுபடி செய்ததற்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மனிதர்களை பாதிக்கும் வகையில் செயல்படும் ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான் செயல்களை கண்டிப்பதோடு நிதி ஒதுக்கி தந்திட வேண்டுகிறோம். மதுபான கொள்கை வழக்கு என பொய் வழக்கு போட்டு, கொல்லைப்புறமாக பிடித்த டெல்லி ஆட்சியை கலைத்துவிட்டு, அங்கே மீண்டும் தேர்தல் நடத்தி ஜனநாயகத்தைகாப்பாற்றுங்கள் என ஒன்றிய அரசை வேண்டுகிறோம்.

பொய் வழக்கு வலையை உடைத்து வெளியே வந்த கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா, கவிதாவை இருகரம் நீட்டி உள்ளத்தால் உறவாடி உவகையுடன் வரவேற்கிறோம். 2026 தேர்தலை முன்னிட்டு வர்த்தகர்களுக்கு திமுகவின் தமிழக அரசு செய்த சாதனைகளை, துண்டு பிரசுரம் மூலம் கடை கடையாக சென்று விநியோகம் செய்வதுடன், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திட இந்த மூன்று மாதமும் உழைத்திட தீர்மானித்திருக்கிறோம். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Government of Timuka ,CHENNAI ,STATE ADMINISTRATORS ,DIMUKA TRADER TEAM ,SECRETARY OF STATE ,KASSI MUTHUMANIKAM ,ANNA ADWALAYAT ,India ,First Commander-in-Chief ,Tamil Nadu ,
× RELATED சொல்லிட்டாங்க…