காக்கிநாடா :ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே வேட்டப்பாளையம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை துரிதப்படுத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு அளித்துள்ளார். விபத்துக்கான காரணம் மற்றும் சம்பவ இடத்தில் நடைபெற்று வரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து அவர் விசாரித்தார்.
