×

அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பெரும்புதூர், பிப்.28: பெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், பள்ளி தலைமையாசிரியர் சகாயம் தலைமையில் அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது. கண்காட்சியை, கூடுதல் வட்டார கல்வி அலுவலர் சுப்புலட்சுமி, மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆகியோர் தொடங்கி வைத்து, பார்வையிட்டனர். இதில், 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ – மாணவிகள் பங்கேற்று, தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி, அதன் செயல்முறை விளக்கம் அளித்தனர். கண்காட்சியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ – மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Tags : Mambakkam ,Perumbudur ,Sakhayam ,Additional ,Education Officer ,Subbulakshmi ,Mambakkam Panchayat ,President ,Venkatesan… ,
× RELATED மாமல்லபுரம் அருகே ‘100 சதவீத...