- கஞ்சி வணிக விழா
- சங்கர பல்கலைக்கழகம்
- காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம் சங்கர பல்கலைக்கழகத்தின் நிர்வாகத் துறை
- காமட்சி சத்தர்
- காமாட்சி அம்மன் கோயில்
- காஞ்சிபுரம்
- பல்கலைக்கழக துணை அதிபர்
- ஸ்ரீனிவாசு
காஞ்சிபுரம் மார்ச் 23: காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தின் மேலாண்மைத் துறை சார்பில் “காஞ்சி வணிக விழா” காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோயில் அருகிலுள்ள காமாட்சி சத்திரத்தில், நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவை பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீநிவாசு தொடங்கி வைத்தார். இணை துணைவேந்தர் வசந்த் குமார் மேத்தா முன்னிலை வகித்தார். மேலாண்மைத் துறை டீன் பாலாஜி நிவாசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இந்த விழா, உள்ளூர் தொழில்முனைவோர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்தி, வணிக வளர்ச்சி மற்றும் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் நடைபெற்றது. மாணவர்களின் தொழில்முனைவு திறன்களை வளர்க்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது. இந்த விழாவில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தினர். மாணவர்களுக்கு நடைமுறை அனுபவம் சிறந்த வாய்ப்பாக இது அமைந்தது.
