×

மதுராந்தகம், செய்யூர் சட்டமன்றத் தொகுதி வாக்குகள் எண்ணும் மையத்தில் ஒருங்கிணைப்பாளர் ஆய்வு

மதுராந்தகம், மார்ச் 27: மதுராந்தகம், செய்யூர் சட்டமன்றத் தொகுதியில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட உள்ள மையத்தில் வாக்கு எண்ணும் ஒருங்கிணைப்பாளர் ஆய்வு நடத்தினார். தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடப்பதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா களைகட்டி வருகிறது. இந்நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சார்பில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. மேலும், வாகன சோதனை, வாக்கு இயந்திரம் தொகுதி வாரியாக அனுப்புதல், வாக்குப்பதிவு மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட உள்ள பள்ளி கல்லூரிகளில் ஆய்வு செய்தல் ஆகிய பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், செய்யூர் சட்டமன்ற (தனி) தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,00,103 பேரும், பெண் வாக்காளர்கள் 1,01,934 பேரும் என மொத்தம் 2,02,055 வாக்காளர்கள் உள்ளனர். மதுராந்தகம் சட்டமன்ற (தனி) தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,03,943 பேரும், பெண் வாக்காளர்கள் 1,07,288 பேரும் என மொத்தம் 2,11,295 வாக்காளர்கள் உள்ளனர். இந்த 2 தொகுதிகளிலும் அடுத்த மாதம் வாக்குப்பதிவின்போது வாக்கு இயந்திரங்களில் பதிவாக உள்ள வாக்குகள் மதுராந்தகம் அருகே உள்ள சுபம் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதனையொட்டி இக்கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு, குடிநீர், கழிவறை, மின்விளக்கு ஆகியவை குறித்து கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளரும், செய்யூர் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எணணும் மையங்களின் ஒருங்கிணைப்பாளருமான மலர்விழி நேற்று ஆய்வு செய்தார். மேலும் வாகனம் நிறுத்தும் இடம், அரசியல் கட்சியினரும், அதிகாரிகளும் தனித்தனியே வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்று வரும் அமைக்கப்படவுள்ள பாதை ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது சமூக பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியர் வீரமணி, மண்டல துணை வட்டாட்சியர் ரேகா, வருவாய் ஆய்வாளர் பிரேமா, கிராம நிர்வாக அலுவலர் யூனஸ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags : Madhurantakam, Seyyur assembly ,Madhurantakam ,Madhurantakam, ,Seyyur assembly ,Tamil Nadu ,
× RELATED மாமல்லபுரம் அருகே ‘100 சதவீத...