×

திருப்போரூர் தொகுதியில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

திருப்போரூர், மார்ச் 24: திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு இலக்கை எட்டும் வகையில், வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு திட்டங்களை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்போரூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் செல்பி எடுத்துக் கொள்ளும் வகையில், அதற்கான செல்பி ஸ்டாண்ட் வைக்கப்பட்டது. இதில் பேருந்து நிலையத்திற்கு வந்த ஏராளமான பொதுமக்கள் நின்று, செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டனர். இதையடுத்து, பேருந்து நிலைய வளாகத்தில் கண்டிப்பாக வாக்களிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு, கையெழுத்திடும் வகையில் பிரமாண்ட பேனர் வைக்கப்பட்டது.
இந்த பேனரில் பொதுமக்கள் கையெழுத்திட்டு சட்டமன்ற தேர்தலில் கட்டாயமாக வாக்களிப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் திருப்போரூர் வருவாய் ஆய்வாளர் ஆறுமுகம், திருப்போரூர் கிராம நிர்வாக அலுவலர் நிஷா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Thiruporur ,
× RELATED சங்கரா பல்கலையில் காஞ்சி வணிக விழா