×

திருத்தணியில் 5ம் நாள் மாசிப் பெருவிழா அன்ன வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா

திருத்தணி, பிப்.26: திருத்தணி முருகன் கோயிலில் மாசி பெருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 11 நாட்கள் நடைபெறும் விழாவில் 5ம் நாளான நேற்று காலை மூலவருக்கு அபிஷேக பூஜைகள் தொடர்ந்து தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. காலை 10 மணிக்கு வள்ளி-தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் எழுந்தருளினார். கற்பூர தீபாராதனை தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க சாமி மாடவீதியுலா நடைபெற்றது. பக்தர்கள் அன்ன வாகனத்தில் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இரவு சாமி வெள்ளி மயில் வாகன சேவை நடைபெற்றது.

Tags : Lord Muruga ,Masi festival ,Tiruttani ,Murugan temple ,Maha ,
× RELATED திருவள்ளூர் நகரில் போக்குவரத்து...