திருவள்ளூர், பிப்.25: திருவள்ளூரில் அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு, வீடற்ற ஏழைகளுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் வேண்டும் என கலெக்டர் பிரதாப்பிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்ட பிரதாப்பிடம், பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: பூண்டி ஒன்றியம், மெய்யூர் ஊராட்சி, குருபுரம் கிராமத்தில் சர்வே எண் 125ல் ஏக்கர் 9.65 சென்ட் அரசு தரிசு நிலம் தமிழ்நாடு நில உடமை மேம்பாட்டு திட்டத்திற்கு முன் இருந்தது. அதன் பின்னர் நாசிகான், முனிகான் (எ) முனுசாமிகான் ஆகிய இருவருக்கும் பட்டா வழங்கப்பட்டது. அதன் பட்டா எண்:198, மேற்படி இடம் இதுநாள் வரை காலியாக தான் உள்ளது.
இந்நிலையில், காலி இடத்தில் எங்கள் காலனி பிள்ளைகள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர். அப்போது, பிள்ளைகளை விளையாட வேண்டாம் என்று சிலர் மிரட்டினர். மேலும் போலி பத்திரம் தயார் செய்து பத்திரத்தில் தாசிகான் மற்றும் முனிகான் என்பவரிடம் வாங்கியதாக கூறியுள்ளனர். அதற்கு, எந்த ஒரு அசல் ஆவணமும் இல்லை. தற்பொழுது 6.5.2016 அன்று மற்றொரு போலி ஆவணம் கிரையம் செய்யப்பட்டுள்ளது. முழு உரிமையாளர் தாசிகான் மற்றும் முனிகான் மட்டும் தான். அவர்களுக்கு பிறகு அவர்கள் வாரிசு அடைய வேண்டியது. அவர்கள் அடையவில்லை என்றால் அரசாங்கமே மீண்டும், அந்த இடத்தை மீட்டுக் கொள்ள வேண்டும். எனவே, தாங்கள் உரிய விசாரணை நடத்தி தவறாக பெறப்பட்ட பட்டாக்களை ரத்து செய்து, வீட்டுமனை இல்லாத எங்கள் காலனி மக்களுக்கு வீட்டுமனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
