×

திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள் பயிற்சி பாசறை கூட்டம்

திருத்தணி,பிப்.24:திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில், கனகம்மாசத்திரத்தில் வெல்லும் தமிழ் பெண்கள் பயிற்சி பாசறை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான எஸ்.சந்திரன் தலைமை தாங்கினார். மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் சரஸ்வதி, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் கோவிந்தம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவாலங்காடு மேற்கு ஒன்றிய செயலாளர் கூளூர் எம்.ராஜேந்திரன் வரவேற்றார். இக்கூட்டத்தில் திருத்தணி, திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மகளிர் பெரும் திரளாக கலந்து கொண்டனர். பெண்கள் அனைவருக்கும் திமுக அரசின் சாதனைகள் விளக்கும் கையேடு வழங்கப்பட்டது. திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் வாழ்வாதாரம் மேம்பட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்கள் குறித்து வீடு வீடாக சென்று பெண்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது பயிற்சி பாசறைக் கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, திருத்தணி எம்.பூபதி, மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Tiruvallur West District DMK ,Tamil women's training camp ,Tiruttani ,women's training camp ,Kanagammachatram ,District Secretary ,MLA ,S. Chandran ,Saraswathi ,Govindammal… ,
× RELATED தச்சூர்-சித்தூர் இடையே ரூ.3,998 கோடியில் 6...