பூந்தமல்லி, பிப்.25: பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நகர செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஒவ்வொரு வார்டு கிளையிலும் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செய்தனர். மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், கல்வி உபகரணங்கள், இலவச வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் சார்லஸ், பி.கே.மணி, கோபிநாத், சல்மான் ஜாவித் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டுப்பாக்கம், பாரிவாக்கம், கண்ணபாளையம், சென்னீர்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒன்றிய செயலாளர் கேஜிடி.கவுதமன் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரிவாக்கம் வைத்தியநாதன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஷீலா சரவணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அந்தமான் முருகன் தலைமையில், இணை செயலாளர் லயன் ஜெ.உதயகுமார் ஏற்பாட்டில் நடந்தது.
