×

ஆந்திராவில் இருந்து தமிழக எல்லைக்கு டிராக்டரில் மணல் கடத்தி விற்பனை

திருத்தணி, பிப்.25: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆற்று மணல் குவாரிகள் இல்லாததால் மணலுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது. எம்.சாண்ட் பயன்படுத்தி தான் வீடுகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழக-ஆந்திர எல்லை கிராமங்களில் ரகசியமாக டிராக்டர்களில் மணல் கடத்தி விற்பனை நடைபெற்று வருவது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கனகம்மாசத்திரம் போலீசார் நெடும்பரம் பகுதியில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலம், விஜயபுரம் மண்டலம், கோசலநகரம் பகுதியில் இருந்து ஆற்று மணல் டிராக்டரில் கடத்தி தமிழக கிராமத்தில் விற்பனைக்கு எடுத்து வந்ததை போலீசார் டிராக்டருடன் பறிமுதல் செய்தனர். மணல் கடத்தி வந்த ஆந்திர மாநில, விஜயபுரம் மண்டலம், கோசல நகரம் சேர்ந்த டிராக்டர் உரிமையாளர் வெங்கடராஜுலு, டிராக்டர் டிரைவர் சுப்பிரமணி ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags : Andhra Pradesh ,Tamil Nadu ,Thiruthani ,Thiruvallur district ,Andhra ,
× RELATED திருத்தணியில் 5ம் நாள் மாசிப் பெருவிழா...