×

திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் குற்றச்சாட்டு

 

திருமலை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர் கே.நாராயணா, நேற்று திருப்பதியில் நிருபர்களுக்கு பேட்டியில் கூறியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில் கலப்பட நெய் வழக்கில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இரட்டை வேடங்களில் நடிக்கின்றன. இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ. மூலம், எஸ்.ஐ.டி. விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்த போதிலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.

மேலும், ஒரு நபர் உள்ள உறுப்பினரின், ஆணையத்தை நியமிப்பதற்கான காரணம் என்ன? இதில் அவரவர் அரசியல் ஆதாயத்திற்காக வெங்கடேஸ்வர சுவாமியை பயன்படுத்தி பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துகிறார்கள். மேலும், விசாரணை என்ற பெயரில், மற்றொரு விசாரணை என்று கூறி தாமதப்படுத்தி குற்றம் சாட்டப்பட்டவர்கள், தண்டனை கிடைக்காமல் தவிர்க்க இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags : government ,Tirupati ,Communist Party of India ,Tirumala ,K. Narayana ,Tirupati Ezhumalaiyan Temple ,CBI ,
× RELATED சந்திர கிரகணம் காரணமாக திருப்பதி...