×

பஞ்சாயத்து பேசி பிரிந்து சென்று காதலனை திருமணம் செய்த இளம்பெண் வெட்டிக்கொலை: மாஜி கணவர் கைது

திருமலை: தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் மந்தானியை சேர்ந்தவர் மகேஷ்(32). கனடாவில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மகாராஷ்டிர மாநிலம் சந்திரபுரி மாவட்டம் திலக்வார்டை சேர்ந்தவர் சுனிதா (26). சுனிதாவின் தாய்வழி பாட்டி வீடு மந்தானியில் உள்ளது. இதனால் சுனிதா அடிக்கடி பாட்டி வீட்டிற்கு செல்வார். அப்போது மகேஷ்க்கும், சுனிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்துள்ளனர். இருவரும் கடந்த 2022ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். சுனிதாவுக்கு விசா கிடைக்காததால் அவர் தங்கள் வீட்டிலேயே தங்கினார். மகேஷ் மட்டும் வேலைக்காக கனடா சென்றார்.

இந்நிலையில் சுனிதாவுக்கும், வனஸ்தலிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. சுனிதாவுக்கு விசா கிடைத்துவிட்டதால் அவரை, மகேஷ் கனடாவுக்கு அழைத்துச்சென்றார். ஆனால் சுனிதா அங்கிருந்தபடியே ஸ்ரீநாத்துடன் அடிக்கடி செல்போனில் பேசியுள்ளார். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த மகேஷ், மனைவியை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.இதுகுறித்து சுனிதா கனடாவில் உள்ள போலீசில் கூறி அவர்கள் உதவியுடன் இந்தியாவில் உள்ள தனது பெற்றோரிடம் திரும்பினார். பின்னர் கனடாவில் உள்ள கணவர் மகேஷ், மந்தானியில் வசிக்கும் மாமியார் மீது புகார் கூறினார். மேலும் பல்லாப்பூர் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் விவாகரத்து வழங்கவில்லை.

ஆனால் சுனிதாவின் வற்புறுத்தலால் கடந்த 2024ம் ஆண்டு பெரியவர்கள் முன்னிலையில் மகேஷும் சுனிதாவும் பிரிந்தனர். மகேஷ் கனடாவிலேயே தங்கியுள்ளார். சுனிதா, 2025ம் ஆண்டு ஏப்ரல் 26ம்தேதி பெரியவர்கள் முன்னிலையில் ஸ்ரீநாத்தை திருமணம் செய்து கொண்டாராம். இந்நிலையில் மகேஷின் தாய் இறந்துவிட்டதால் இறுதிச்சடங்குக்காக இந்தியாவுக்கு வந்த மகேஷ், மீண்டும் கனடாவுக்கு செல்ல முயன்றார். ஆனால் சுனிதா தாக்கல் செய்த வழக்கு காரணமாக கனடா செல்ல முடியவில்லை. இதனால் சுனிதா மீது மகேஷ் கடும் ஆத்திரத்தில் இருந்தார்.

ஸ்ரீநாத்தை திருமணம் செய்துகொண்ட சுனிதா, வனஸ்தலிபுரத்தில் உள்ள கப்ராய் ஏரி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். வீட்டில் இருந்தபடி இன்ஸ்டா ரீல்களை சுனிதா பதிவிட்டு வந்தார். இதனைக்கண்ட மகேஷ்,
சுனிதாவை கொல்ல திட்டமிட்டார். இதற்காக சுனிதாவின் அடுக்குமாடி குடியிருப்பு அருகே அறை எடுத்து தங்கிய ​​மகேஷ், சுனிதாவின் நடமாட்டத்தை கண்காணித்தார். நேற்று சுனிதாவின் வீட்டிற்குள் சென்றார். அங்கு தனியாக இருந்த அவர் மீது மிளகு ஸ்ப்ரேயை அடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சுனிதா அதே இடத்தில் இறந்தார்.

இதையறிந்த போலீசார் விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் மகேஷ், ஏற்கனவே தயாராக வைத்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே போலீசார் தடுத்து நிறுத்தி அவரை கைது செய்தனர். பின்னர் சுனிதாவின் சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Panchayat ,Tirumala ,Mahesh ,Mandani, Pettapalli district, Telangana ,Canada ,Sunitha ,Tilakward, Chandrapuri district, Maharashtra ,Mandani ,Sunitha… ,
× RELATED ஓடும் பஸ்சில் பெண் பயணியின் பர்சை...