×

பைக் திருட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் பிடிபட்டனர்

பெரம்பூர்: கொளத்தூர் அன்னை அஞ்சுகம் நகர் 3வது குறுக்கு தெருவை சேர்ந்த ஜெயபாரதி (34), கடந்த 6ம் தேதி இரவு வீட்டின் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். இதை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
புகாரின் பேரில், கொளத்தூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், 2 பேர், இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. அதை வைத்து ராமாபுரம் கொத்தாரி 9வது தெருவை சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் நெசப்பாக்கம் இந்திரா காந்தி நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட இந்த சிறுவர்கள், திருடிய வாகனங்களை திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா தச்சம்பாடி பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (19) என்பவரிடம் விற்பனை செய்தது தெரியவந்தது. சென்னையில் பைக் மெக்கானிக்காக வேலை செய்தபோது ஜெகதீஷுக்கு சிறுவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர், சொந்த ஊருக்கு சென்று இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.

விபத்தில் சிக்கும் அல்லது பழுதாகி நிற்கும் இருசக்கர வாகனங்களின் ஆர்சி புக் வைத்துக்கொண்டு அதேபோன்ற வண்டிகளை திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா தச்சம்பாடி பகுதிக்குச் சென்ற போலீசார் திருட்டு வாகனங்களை விற்பனை செய்த ஜெகதீஷை கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, 2 சிறுவர்களை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பினர். ஜெகதீஷை சிறையில் அடைத்தனர்.

Tags : Perampur ,Jayabharati ,street ,Annai Anjukam Nagar, Kolathur ,Kolathur ,
× RELATED ஓடும் பஸ்சில் பெண் பயணியின் பர்சை...