×

வனத்துறைக்குச் சொந்தமான ரோஸ்வுட் மரங்களை வெட்டியவர்கள் கைது

ரெட்டியார்சத்திரம் : திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச்சரகத்திற்குட்பபட்ட பண்ணைப்பட்டி கோம்பையில், வனத்துறைக்கு சொந்தமான மரங்களை சிலர் வெட்டி எடுத்துக்கொண்டு, குணசீலன் என்பவரது பட்டா நிலத்தில் வைத்து அறுத்துக் கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.

வன அலுவலர் நாகசதீஷ் கிடிஜாலா, உத்தரவின்படி, கன்னிவாடி வனச்சரகர் குமரேசன் தலைமையிலான வன பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு சிலர், தோதகத்தி என்னும் ரோஸ்வுட் உயர்ரக மரங்களை அறுத்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. அவர்கள், கரிய கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி, கேரளாவைச் சேர்ந்த அன்வர், நத்தம் வத்தக்குளத்துப்பட்டியைச் சேர்ந்த ராமர் என்பதும் தெரிய வந்தது.

வனத்துறையினர், அவர்கள் மீது வழக்கு பதிந்து, ஆத்தூர் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய குணசீலன், ரமேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

அதேபோன்று, கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை பகுதியில், அரசு வருவாய் நிலத்தில் உள்ள தோதகத்தி மரங்களை வெட்டி கடத்துவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பூம்பாறை வனச்சரகர் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அனுமதியின்றி தோதகத்தி மரத்தினை வெட்டி கடத்திய, அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜ் என்பவர் மீது வழக்கு பதிந்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், 25க்கும் மேற்பட்ட மரங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Retiyarsatram ,Gunaseelan ,Panapati Gomba ,Kanniwadi ,Forest Reserve ,Dindigul ,Forest Officer ,Nagasatish Kidijala ,
× RELATED பஞ்சாயத்து பேசி பிரிந்து சென்று...