- சத்யராஜ்
- விஜய்
- திமுக சென்னை கிழக்கு மாவட்ட மருத்துவக் குழு
- அம்பத்தூர், சென்னை
- திமுக தகவல் தொழில்நுட்ப குழு
- துணை செயலாளர்
- திவ்யா சத்யராஜ்
- கரூர்
- சேலம்
- திண்டுக்கல்
- தவேகா
சென்னை அம்பத்தூரில் திமுக சென்னை கிழக்கு மாவட்ட மருத்துவ அணி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் திவ்யா சத்யராஜ் பேசியதாவது: கரூர், சேலம், திண்டுக்கல் ஆகிய கூட்டங்களில் உயிரிழந்தவர்களுக்கு தவெக தலைவர் விஜய் தான் பதில் சொல்ல வேண்டும். சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விஜய்யின் பேச்சை கேட்டேன்.
அதில் அவர் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என தேர்தல் வாக்குறுதிகளை பார்த்து சொல்லுகிறேன் எனக் கூறி இருந்தார். அவருக்கு மக்களுக்கு என்ன பண்ண வேண்டும் என புரிதலே இல்லை என்றால் மக்கள் எப்படி உங்களுக்கு ஓட்டு போடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியும். உங்கள் கட்சியில் பெண்களுக்கு எந்த பாதுகாப்பு இல்லை. உங்க கட்சியைச் சார்ந்த அஜிதாவை எப்படி நடத்தினீர்கள் என்பதிலேயே தெரிகிறது.
தவெக தொண்டர்களுக்கு ஒரு சவால் மூன்று நாட்களுக்குள் விஜய் உடன் ஒரு புகைப்படம் எடுத்து என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அனுப்புங்கள். கவுண்டன் ஸ்டார்ட். அதேபோல் தவெக தலைவர் விஜய்க்கு ஒரு சவால் துண்டு சீட்டு இல்லாமல் 10 தொண்டர்களின் பெயரை கூற வேண்டும். ஏனென்றால் நீங்கள் கட்சியின் தலைவராக இருப்பதால் தொண்டரின் பெயரை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அரசியலில் தைரியம் என்பது முக்கியமானது. இவ்வாறு அவர் பேசினார்.
