×

ஆவடி அருகே வேன் கவிழ்ந்து விபத்துகுள்ளானது: பெண் உயிரிழப்பு

 

சென்னை: ஆவடி அருகே பேருந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்னர். விழுப்புரத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி கோயிலுக்கு வேனில் பெண்பக்தர்கள் வந்த போது வண்டலூர் – செங்குன்றம் புறவழிசாலையில் சென்று கொண்டிருந்த போது தடுப்பு சுவரில் வேன் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விழுப்புரம் மாவட்டம் சூரபாளையம் பகுதியில் இருந்து 21 பெண் பக்தர்கள் பொன்னேரி சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வேனில் ஆன்மிக சுற்றுலா சென்றனர். வண்டலூர் – செங்குன்றம் புறவழிசாலையில் சென்ற வேன் ஆவடி அருகே காட்டுர் பகுதியில் சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் ரெபேக்கா என்ற பெண் உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Avadi ,Chennai ,Vilupura ,Thiruvapuri Temple ,Thiruvallur District ,Vandalur ,
× RELATED திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிட –...