×

முருகன் கோயிலுக்கு சென்ற வாகனம் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

சென்னை: விழுப்புரத்தில் இருந்து சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு பெண்கள் பயணித்த மினி வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் ரவேகா (20) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆவடி காட்டூர் பகுதியில் நடந்த இந்த விபத்தில் மேலும் 20 பெண்கள் காயமடைந்து சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மினி வேன் ஓட்டுநர் மோகன் தூக்க கலக்கத்தில் இருந்ததால் அவரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்தில் சிக்கியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Murugan temple ,Chennai ,Raveka ,Villupuram ,Siruvapuri Murugan temple ,Avadi Kattur ,
× RELATED திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிட –...