×

காலமுறை ஊதியம் வழங்க கோரி சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

திருப்பூர்,பிப்.18:காலமுறை ஊதியம் வழங்க கோரி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு பாத்திரத்தில் ஒலி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் நடவடிக்கை குழுவினர் கடந்த 3-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் கலெக்டர் அலுலவகம் முன்பு அவர்கள் 7-ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராட்ட களத்திலேயே அவர்கள் உணவு சமைத்தும் உண்டு வருகின்றனர்.நேற்று அவர்கள் பாத்திரத்தை தட்டி ஒலி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட தலைவர் ராமாத்தாள் தலைமை வகித்தார். தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட கெளரவ தலைவர் பாக்கியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

 

Tags : Satnav ,Anganwadi ,Tiruppur ,Sathinavu ,Sathinav ,
× RELATED டைமிங் பிரச்னையால் மினி பஸ் கண்ணாடி உடைப்பு