×

அவிநாசி அரசு கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு விழா

அவிநாசி மார்ச் 4: அவிநாசி அரசு கல்லூரியில், தொழில் முனைவோர் மேம்பாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஹேமலதா முன்னிலை வகித்தார். தொழில் முனைவோர் மேம்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் வேலை தேடுபவர்களாக அல்லாது, வேலை வழங்குபவர்களாக உருவாக வேண்டும் என மாணவர்களிடையே ஊக்கத்தை ஏற்படுத்தினர். இவ்விழாவில், அனைத்து துறைகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

 

Tags : Entrepreneurship Development Festival ,Avinashi Government College ,Avinashi ,Government College ,Hemalatha ,Entrepreneurship ,Development Committee Coordinator ,Balamurugan ,
× RELATED டைமிங் பிரச்னையால் மினி பஸ் கண்ணாடி உடைப்பு